the best of professionals

MS. AMUTHA

டி டி என் சுவாமி தயானந்தா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். எங்களுடைய தலைமையாசிரியரின் கீழ் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இப்பள்ளியில் 39 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். 25 கிராமங்களிலிருந்து மாணவ, மாணவியர்கள் வந்து கல்வி பயில்கின்றனர். அனைத்து வசதிகளும் எம் பள்ளி மாணவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. 6 – 10 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தனித்தனியே அறிவியல் ஆய்வகம், கணித ஆய்வகம், ATL ஆய்வகம் மற்றும் Spoken English வகுப்புகள் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணையோடு கணினி வகுப்புகள் நடத்தப்படுகிறது. சுத்தமான குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. நவீன கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கடந்த 26 ஆண்டுகளாக குடிநோய் சிகிச்சை முகாம் TTK மருத்துவமனயால் நடத்தப்பட்டு வருகிறது. தலைமையாசிரியர் மற்றும் தாளாளர் இருவரும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு மிகவும் அரும்பாடுபட்டு வருகின்றனர் எனக் கூறிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

MS. SHANTHI KRISHNAN

அனைத்து திறமைகளையும் உள்ளடக்கிய எம் பள்ளி மாணாக்கர்களை இன்னும் மெருகேற்ற ஆங்கிலப் புலமை அவசியம் என்பதனை உணர்ந்து இக்கல்வி ஆண்டில் (2018-19), கீழே கொடுக்கப்பட்டுளளவை செயல்படுத்தப்படுகிறது.

1) 6,7,8, வகுப்புகளுக்கு (வாரம் ஒரு பாடவேளையாக) ஆங்கிலம் கற்க அடிப்படையான பல பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் மனதில் ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும் மிக எளிது என்ற எண்ணம் துளிர்விட்டு இருக்கிறது.
2) ஆங்கில இலக்கிய மன்றம் மூலமாக 6 – 12 வகுப்புகளில் உள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் விளையாட்டு மூலம் ஆங்கிலம் கற்க ஆவண செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் அதிக ஆங்கிலச் சொற்களை அறிந்து அதனை பயன்படுத்த ஆயத்தமாகிவிட்டனர்.
3) மேலும் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் 43 குழந்தைகள் SPELL BEE என்ற போட்டியில் பங்குபெற தாமாக முன் வந்து தங்கள் பெயர்களை பதிவு செய்து அதற்க்கான பயிற்ச்சியை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

MS. G. REVATHI

டி டி என் சுவாமி தயானந்தா மேல் நிலைப்பள்ளியில் முதுகலை வேதியல் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு ஆங்காங்கு மாலை மற்றும் இரவு வகுப்புகள் (Tuition classes) நடத்தப்பட்டு வருகின்றன. மற்ற கிராமப்புற பள்ளிகளில் இல்லாத வகையில் ATL Lab, Maths Lab, Science Lab, English lab ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களின் வாழ்வியல் திறன் மேம்பாட்டிற்கு நீதிக்கதைகள் தொடர்பான காணொளி வகுப்புகள் (தளிர்திறன்) மாணவர்களுக்கு போதை பழக்கங்கள் தொடர்பாகவும், மாணவிகளுக்கு சுய கட்டுப்பாடு தொடர்பாகவும் அவ்வப்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகின்றன..

MR. R. RAJU

• மிகச் சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது.
• அனைத்து பாடங்களுக்கும் ஆய்வகம், குறிப்பாக மாணவர்களுக்கு கணித பாடக்கருத்தினை எளிதாக புரிந்து கொள்வதற்கான கணித மாதிரிகளை கொண்டு கணித ஆய்வகம் நம் பள்ளியில் அமைந்துள்ளது.
• கிராமப்புற பள்ளி என்பதால் கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாட்களில் வழங்ககப்படுகிறது.
• காற்றோட்டமான மற்றும் சுகாதாரமான முறையில் பள்ளியானது அமைந்ததுள்ளது.
• சராசரி மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள், கலாச்சாரத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப் பிரார்த்தனை, யோகா பயிற்சி வகுப்புகள் - வாழ்வியல் கல்வி நடத்தப்படுகின்றன.
• மாணவர்களின் கல்வித்தரம் உயரவும் மேலும் சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய வகையில் அவர்களை உருவாக்கித் தருகிறோம்.

MR. P. MOHAN

நான் நான்கு ஆண்டுகளாக இப்பள்ளியில் பணி புரிகிறேன். இப்பள்ளியில் மாணவர்கள் சுற்றுச்சுழலை பேணி காப்பதில் சிறப்பாக செயல்படுகின்றனர். மாணவர்களின் செயல்பாட்டை மேலும் ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு சிறப்பு வில்லை(badge) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் செயல்பாடு மற்றும் பங்களிப்பானது மேலும் அதிகரித்துள்ளது. பள்ளியின் தூய்மையை பராமரிப்பதில் மாணவர்களின் ஈடுபாடு தீவிரமடைந்துள்ளது.

MR. S. THINAKARAN

எனது பள்ளி மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் புதிய தலைமுறையினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இதன் காரணமாக, மிகச்சிறந்த நிர்வாகிகளை கொண்ட எங்களது நிர்வாகம், நன்றாக திட்டமிட்டு பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவ, மாணவிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து தூய்மையான, உள்கட்டமைப்பு வசதிகளையும், ஆங்கிலம் முதல் அறிவியல் வரை உள்ள அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ள ஏதுவான, அனைத்து வசதிகளையும் கொண்ட ஆய்வகங்களை எங்களது பள்ளிச்செயலர் பத்மஸ்ரீ சாந்தி ரெங்கநாதன் அவர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் திரு கே. பாஸ்கர் அவர்களின் சீரிய முயற்சியில் நிறுவப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற, முன் அனுபவம் நிறைந்த எங்களது பள்ளி ஆசிரியர்களின் துணையோடு அதிகத் தரம் வாய்ந்த கல்வி அளிக்கப்படுகிறது.